தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடையநல்லூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-13 11:26 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் மேற்கு மலம்பேட்டை தெருவை சேர்ந்தவர் ஜக்கம்மா பாண்டி (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. குடியிருக்க சொந்த வீடு இல்லாததால் கஷ்டப்பட்டு பிரதமரின் இலவச வீடுகட்டும் திட்டத்தில் அவரின் மனைவி மற்றும் மகள்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். அப்போது ஜக்கம்மா பாண்டி கட்டுமான பொருட்களை தெரியாமல் எடுத்து விற்பனை செய்ததால் குடும்பத்தினர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஜக்கம்மா பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஜக்கம்மா பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்