தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம் தாத்தப்பன்குளம் 3-வது சந்து தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 46). கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவருக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டுக்குள் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் சேகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.