தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கம்பம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 60). சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயா (48). இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், கோபிநாத் (26), ரஞ்சித்குமார் (28) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில், கோபிநாத், ரஞ்சித்குமார் ஆகியோர் ராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர். வேல்முருகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வேல்முருகனின் மனைவி, அவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அதேபோல் வேல்முருகனும் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது வேல்முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.