தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை - போலீஸ் விசாரணை

திருவள்ளூரில் கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-07 09:04 GMT

திருவள்ளூர் அடுத்த சென்ராயன்பாளையம் பங்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (38). இவர்கள் கடந்த 6 மாதங்களாக குடும்பத்துடன் திருவள்ளூர் பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். குடி பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சுப்பிரமணி திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே மயங்கி விழுந்து கிடந்தார். இதையடுத்து அவரது மனைவி சுதா அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் சுப்பிரமணியை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது சுப்பிரமணி விஷம் குடித்து மயங்கி விழுந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்