விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருவள்ளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-31 12:59 GMT

திருவள்ளூரை அடுத்த ராம தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல் நலம் தேறாத நிலையில், மனவேதனை அடைந்த ஏழுமலை நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள வயல்வெளியில் விஷம் குடித்து (பூச்சி மருந்து) உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்