மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி தற்கொலை

உடல்நலக்குறைவால் அவதி மதுவில் விஷம் கலந்து குடித்த தொழிலாளி தற்கொலை உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம்

Update: 2022-09-11 16:36 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குவாகம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 50). தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் அதே ஊரில் உள்ள எல்லை காளியம்மன் கோவில் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் அவரை மீ்ட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்