விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சிகார் ஊராட்சி கேரளந்தான் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகையன் (வயது 57) விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி மதுபழக்கத்தை கைவிட வேண்டும் என முருகையனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முருகையன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.