விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

விஷம் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-26 19:16 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், கல்லாத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் பாஸ்கர்(வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா. இந்நிலையில் பாஸ்கருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு கை, கால்கள் செயல் இழந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) தின்றார். இதில் மயங்கி கிடந்த பாஸ்கரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்