அருமனையில் திராவகம் குடித்து தொழிலாளி தற்கொலை

அருமனையில் திராவகம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-14 19:26 GMT

அருமனை:

அருமனை அருகே உள்ள கொக்கஞ்சி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது44), தொழிலாளி. அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்ற கனகராஜ் சம்பவத்தன்று வீட்டில் ரப்பர் பால் உறைய வைக்கும் திராவகத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த கனகராஜிக்கு சவுமியா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்