அருமனையில் தொழிலாளி தற்கொலை

அருமனையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-16 19:13 GMT

அருமனை,:

அருமனையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

அருமனை மேலதெரு நாச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 62), தொழிலாளி. இவருடைய மனைவி, அருகில் வசிக்கும் மகளின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. நேற்று முழுவதும் வீட்டில் இருந்து முருகன் வெளியே வராததால், அவரை உறவினர் பார்க்க வந்தார். அப்போது தான் முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுபற்றி அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்