தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

நாகூரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-06-13 18:03 GMT

நாகூர்:

நாகூர் வண்ணாகுளம் மேல்கரையை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயபாண்டியனுக்கு இடது காலில் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவருக்கு வலி அதிகரிக்கவே, மனமுடைந்த ஜெயபாண்டியன் வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்