இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி கொலை

வடமதுரை அருகே இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-11 16:37 GMT

நிலத்தகராறு

வடமதுரை அருகே உள்ள மோர்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லு (வயது 44). கூலித்தொழிலாளி. அவருடைய உறவினர் பாலன் என்ற முருகையா (53). இவர்களுக்கிடைய நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி நல்லு, மோர்பட்டி பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தனது உறவினர் மாரியப்பன் (51) என்பவருடன் அங்கு வந்த முருகையா, நல்லுவுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த முருகையா, மாரியப்பன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் நல்லுவை அடித்தனர்.

பரிதாப சாவு

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நல்லுவை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து முருகையாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லு, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து இந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாரியப்பனும் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்