போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
திருப்புவனம் அருகே போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கிள்ளுக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 56).தொழிலாளி. இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் பழையனூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.