பிளம்பர் கொலை வழக்கில் தொழிலாளி கைது

பிளம்பர் கொலை வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-01 09:06 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). பிளம்பர், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சரவணன் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் பகுதிக்கு சென்ற மணிமங்கலம் போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகள தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த தொழிலாளி பார்த்திபன் ( 38) தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பாக்கம் பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது ஆதனஞ்சேரியை சேர்ந்த சரவணன், மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாகவும் அப்போது வாய் தகராறு ஏற்பட்டு எங்களுக்குள் கைகலப்பாக மாறியது. அப்போது அருகில் இருந்தவர்கள் தகராறை தடுத்து விட்டனர். இதனையடுத்து அங்கிருந்து சென்று விட்டோம்.

பின்னர் இரவு ஆத்தனஞ்சேரி பகுதியில் இருந்த என்னை மோட்டார் சைக்கிளில் மது குடிக்க போகலாம் வா என்று ஆரம்பாக்கம் டாஸ்மா்க் கடை எதிரே ஏரிக்கரைக்கு அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய போது சரவணன் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து என்னை வெட்ட முயன்றார். அப்போது அந்த கத்தியை பறித்து சரவணன் கழுத்து பகுதியில் வெட்டினேன்.

இவ்வாறு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்