போதை பொருட்கள் கடத்திய தொழிலாளி கைது
போதை பொருட்கள் கடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே தாளூர் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் இருந்து வந்த பஸ்சில் இறங்கி, தமிழக எல்லைக்குள் வந்த ஒருவரது பையை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் போதை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த நபரிடம் எருமாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜனார்த்தன், வேலுசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ெதாழிலாளியான கவுர் ஹரிதாஸ் (வயது 49) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கவுர் ஹரிதாசை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கக்குண்டி சோதனைச்சாவடியில் சோதனையின் போது, சுல்தான்பத்தேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த கூடலூரை சேர்ந்த சிவா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ¾ லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.