தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் கேட்டு தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளி கைது

Update: 2022-08-24 16:51 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சீனிவாசன். சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்றார். அப்போது அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சுனில் என்கிற அந்தோணிராஜ்(வயது 35) என்பவர் தனது மகனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்