குட்டையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-05-20 06:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வஜ்ரரெட்டி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அன்னியாளம் அருகே உள்ள குட்டையில் துணி துவைக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் வஜ்ரரெட்டி தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்