தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 5 பேருக்கு பணி ஆணை

சோளிங்கர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 5 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-07-09 17:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் பரந்தாமன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு தற்காலிக பரப்புரையாளர்கள் 5 பேருக்கு ஆணை வழங்கினார்கள்.

இந்த பரப்புரையாளர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும், பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சீராக செயல்படுத்துதல், பொதுமக்களிடையே 100 சதவீதம் மக்கும் குப்பை மக்கா குப்பையை பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து வீடுகளுக்கும் கழிவறை அவசியத்தை எடுத்துரைப்பது, உள்ளிட்ட பணிகளை பரப்புரையாளர்கள் செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் ஜெயராமன், அலுவலக பணியாளர்கள் வெங்கடேசன், சரண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்