ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களின் வருகை 1-ந் தேதி முதல் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படும் கலெக்டர் தகவல்

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களின் வருகை 1-ந் தேதி முதல் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்படும் என கலெக்டர் மோகன் தொிவித்துள்ளாா்.

Update: 2022-12-26 18:45 GMT

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் வேலையாட்களின் வருகை வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் National Mobile Monitoring System (NMMS) என்ற செல்போன் செயலி மூலம் மட்டுமே பதியப்படும். ஆதலால் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை) ஈடுபடும் அனைத்து வேலையாட்களும், பொதுமக்களும் வேலைநாளின் முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளையும் குறித்த நேரத்தில் செல்போன் செயலி மூலமாக தங்கள் வருகையை தவறாது பதிவுசெய்து வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் விழுப்புரம் மாவட்ட குறைதீர்வு அலுவலரை 8925811345 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்