திட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கை

திட்ட பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-11 17:38 GMT

மானாமதுரை,

மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையன் ஆய்வு செய்தார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உடன் ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் புதிதாக நகராட்சி கட்டிடம் கட்டும் பணி, புதிதாக அமைந்துள்ள வாரச்சந்தை கட்டிடங்கள், நவீன உரக்கிடங்கு, புதிதாக கட்டிடபணி நடைபெற்று வரும் நவீன எரிவாயு தகனமேடை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் அமைய உள்ள 2 அடுக்கு இருசக்கர வாகன காப்பிடம் முதலியவற்றை ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார். நகரின் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டங்கள், சாலை மற்றும் மழைநீர் வடிகால் மேம்பாடு பணியை ஆய்வு செய்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய் இணைப்புகள் மாற்றப்பட்டு புதிதாக பைப்லைன் அமைப்பதற்கும் ரூ.2½ கோடி செலவில் 2 அடுக்கு வாகன காப்பகம், காந்தி சிலையில் அமைக்கப்பட்டு உள்ள 50 ஆண்டுகளுக்கு மேலான குடிநீர் தொட்டியை மாற்றுவது.

இதே போல் ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் இருந்து ஆதனூர் தடுப்பணைக்கு செல்லும் கரை பகுதியை பொதுப்பணித்துறை மூலம் சாலை வசதி அமைத்து தரவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மண்டல பொறியாளர் மனோகரன், நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் சக்திவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்