பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடியில் சீரமைப்பு பணி

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் சீரமைப்பு பணி நடந்துவருகிறது.

Update: 2022-09-12 17:29 GMT

ராமேசுவரம், 

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் சீரமைப்பு பணி நடந்துவருகிறது.

சீரமைப்பு பணி

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதுபோல் கடந்த 34 ஆண்டுகளை கடந்து ரோடு பாலத்தில் சாலை போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பாம்பன் ரோடு பாலத்தை ரூ.16 கோடி நிதியில் சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக முதல் கட்டமாக ரோடு பாலத்தின் கடலுக்குள் அனைத்து தூண்களிலும் உள்ள கீறல்கள் சரி செய்யப்பட்டு ரசாயனம் கலந்த கலவைகள் மூலம் கீறல்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை

மேலும் தூண்களில் புதிய வர்ணம் அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சீசன் தொடங்கும் பட்சத்தில் ரோடு பாலத்தில் 3 மாதத்திற்கு மேல் தூண்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் தற்போது தூண்களில் சீரமைப்பு பணிகள் மற்றும் புதிய வர்ணம் அடிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போதுள்ள வர்ணத்தில் இருந்து 3 விதமான வர்ணங்கள் பாம்பன் ரோடு பாலத்தில் அடிக்கப்பட உள்ளது. தூண், தடுப்புச்சுவர், பாலத்தின் அடிப்பகுதி என 3 விதமான கலர் அடிக்கப்பட உள்ளதாகவும் சீரமைப்பு பணிகள் 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்