12-வது போலீஸ் பட்டாலியன் அமைக்கும் பணி

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலக கட்டிடங்களை தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-09-08 13:23 GMT


ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலக கட்டிடங்களை தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

12-வது பட்டாலியன்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் காவலர் வீட்டு வசதிக்கழகம் சார்பில் ரூ.89.71 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது போலீஸ் பட்டாலியன் அமைப்ப தற்காக அலுவலக கட்டிடங்கள் போலீசார் தங்கும் இடம் மற்றும் நிர்வாக கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

இதில் 12-வது போலீஸ் பட்டாலியன் தலைமை கமாண்டர், 3 உதவி கமாண்டர்கள், 6 இன்ஸ்பெக்டர்கள், 30 சப்- இன்ஸ்பெக்டர்கள், 300 ஏட்டுகள் மற்றும் போலீசாருக்கான குடியிருப்புகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது போலீஸ் பட்டாலியன் அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடவடிக்கை

கட்டுமான பணிகளை தாமதமின்றி, விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு, உரிய காலத்திற்குள் பயன் பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழக நிர்வாக இயக்குனர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. விஸ்வநாதன், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, அவர்கள், 12-வது போலீஸ் பட்டாலியன் கமாண்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், காவலர் வீட்டு வசதிக் கழக கண்காணிப்பு என்ஜினீயர் சேகர், செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்