கல்லூரி வளாகத்தில் தூய்மை பணி

கல்லூரி வளாகத்தில் தூய்மை பணி நடந்தது.

Update: 2022-06-04 19:14 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் பழனி, துணை முதல்வர் பாஸ்கரன், உடற் கல்வித்துறை இயக்குனர் டாக்டர் ஆதிமூலம் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்