பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி
வேலூரில் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி வேலூர் சத்துவாச்சாரி பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் கேரளமாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
வேலூரில் நடந்த இந்த போட்டியை ஒருங்கிணைப்பாளர்கள் வரலட்சுமி, யோகப்பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பயிற்சியாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.