பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு

பாளையங்கோட்டையில் பெண்கள் ஐக்கிய சங்க மாநாடு நடந்தது.

Update: 2023-08-19 19:00 GMT

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் சார்பில், பெண்கள் ஐக்கிய சங்கத்தின் வருடாந்திர மாநாடு தொடங்கியது. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தொடக்க விழாவில் சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெண்கள் ஐக்கிய சங்க பேரணி நடந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் மாநாடு தொடங்கியது.

இதில் சி.எஸ்.ஐ. திருவனந்தபுரம் திருமண்டல பிரதம பேராயரம்மா ஷெர்லி ரசாலம் கலந்து கொண்டு சிறப்பு செய்தி வழங்கினார். ஜார்கண்ட் எப்.எம்.பி.பி. மிஷினரி நகோமி விக்டர் தேவசெய்தி அளித்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்