மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா

தூத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலம் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா நடைபெற்றது.

Update: 2022-08-19 14:28 GMT

தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு சார்பதிவாளர் பொன்மாரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் 18 பேருக்கு விவசாய கடனாக ரூ.40 லட்சத்து 72 ஆயிரமும், மாற்றுத்திறனாளி கடனாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்