நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே மகளிர் உரிமை தொகை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தகுதி அடிப்படையில் உரிமை தொகை வழங்குவதால் மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோவை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,
நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்தே மகளிர்உரிமை தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கணக்கு எடுத்து முடிக்கவில்லை. பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தகுதி அடிப்படையில் உரிமை தொகை வழங்குவதால் மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.
.அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது. முன்னாடியே அமலாக்கத்துறை வந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாமதமாக வந்திருக்கிறது. ஆதாராங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நாளை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.