ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்

குடிநீர் வழங்க வலியுறுத்தி ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-20 19:57 GMT

ஓமலூர்:

முற்றுகை

ஓமலூரை அடுத்த எம்.செட்டிபட்டி ஊராட்சி 2-வது வார்டு குட்டிகவுண்டன் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி தலைவர் கோவிந்தன், ஊராட்சி செயலாளர் அரசு ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கருணாநிதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மன் கோவில்பட்டி ஜம்பிலிருந்து குடிநீர் ஏற்றப்படுவது தான் குடிநீர் டேங்கில் ஏறுவதில்லை. இதனால் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அல்லது ஜம்பிலிருந்து நீர் ஏற்ற வழிவகை செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்