காஞ்சீபுரத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரத்தில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறு தொழில் நடத்துபவர்களுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் அம்பிகாபதி, முன்னோடி வங்கிகளின் மேலாளர் சண்முகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.