ராயவரத்தில் மகளிர் கபடி போட்டி
ராயவரத்தில் மகளிர் கபடி போட்டி நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம், ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு ராயவரம் அண்ணா சீரணி கலையரங்கம் அருகே 47-ம் ஆண்டு மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் மதுரை, தேனி, சேலம், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 25 அணிகள் கலந்து கொண்டன. போட்டியானது பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு இறுதி போட்டிக்கு 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் முதல் பரிசை மதுரை சி.பி. ஆர். சிட்டாம்பட்டி அணியினரும், 2-ம் பரிசை ராயவரம் வாசுகிபுரம் சிங்கார சோலையன் கபடி குழுவினரும், 3-ம் பரிசை சேலம் ஏ.வி.எஸ். கல்லூரியும், 4-ம் பரிசை அரியலூர் எதிர்நீச்சல் கபடி குழுவினரும் பெற்றனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.