பெண்கள் குழுவினர் ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் மரபணு மாற்று உணவுப்பொருளுக்கு எதிராக பெண்கள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-09 18:45 GMT

பெரியகுளம், வடகரை பழைய பஸ்நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் மக்களை பாதிக்கும் மரபணு மாற்று உணவுப் பொருட்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா தேவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் ஆலிம் அகமது முஸ்தபா, சர்வோதீப் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, வக்கீல் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்துவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்