மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம்
களஞ்சேரி ஊராட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம்
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலாண்டேஸ்வரி மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர் சூரியகுமார், அங்கன்வாடி பணியாளர்கள் ரமேஷ், சித்ராதேவி, பெரியநாயகி உள்ளிட்டோர் ஊராட்சியைச் சேர்ந்த 345 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியை மேற்கொண்டனர். இந்த பணியை அம்மாப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது அமானுல்லா உடன் இருந்தார்.