மகளிர் உரிமைத்தொகை திட்ட மனுக்கள் பெறும் முகாம்
மகளிர் உரிமைத்தொகை திட்ட மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
பேட்டை:
மானூர் யூனியன் மதவகுறிச்சி ஊராட்சி வெங்கலபொட்டல் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் பொதுமக்களிடம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மனுக்கள் பெறும் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மானூர் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மகளிர் அணி மேகலா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.