மகளிர்தினவிழா கோலப்போட்டி

கோவில்பட்டியில் மகளிர்தினவிழா கோலப்போட்டி நடைபெற்றது.

Update: 2023-03-13 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன்பள்ளியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டி நடந்தது. கோலப் போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண, வண்ண கோலங்களை வரைந்து அசத்தினா்.

இதில் 2 கோலங்கள் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை வரைந்த பெண்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்டவர் களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆசிரியை அமல புஷ்பம் வரவேற்று பேசினார். சத்தியபாலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் லதா ஸ்ரீவெங்கடேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்.ஜே.மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்