ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தினவிழா

சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT

தட்டார்மடம்:

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மூத்த சுகாதார செவிலியர்கள் சொர்ணலதா, லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். கிராம சுகாதார செவிலியர்கள் மெர்சி, மகேஸ்வரி, நாகவள்ளி, முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஸ்குமார், சித்த மருந்தாளுநர் உச்சிமாகாளி ஆகிேயார் பேசினர். இதில் விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், மருத்துவ பணியாளர்கள் செல்லத்துரை, அமச்சார், அன்னதேவி உள்ளிட்ட மஸ்தூர், ஆஷா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்