மகளிர் தின விழா

ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2023-03-10 18:45 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மாலதி வரவேற்றார். மாணவர்களின் ஆலோசகர் காசிநாததுரை வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் கலந்து கொண்டு பேசினார்.மேலும் சைபர் கிரைம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மாணவர்கள் சைபர் கிரைம் பாதிப்பில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை காட்சிகள் மூலம் விளக்கம் அளித்தார்.விழாவில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் மகிமா நன்றி கூறினார். .விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்