தனியார் வங்கியை பெண்கள் முற்றுகை

ஆம்பூர் அருகே தனியார் வங்கியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-19 18:40 GMT

ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அரங்கல்துருகம், காரப்பட்டு, கதவாளம், அபிகிரிபட்டறை, பொன்னப்பல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நூறு நாள் வேலை சம்பளம், முதியோர் உதவித்தொகை பணம் எடுக்க செல்லும் பெண்கள் மற்றும் முதியோர்களை வங்கி ஊழியர்கள் அலைக்கழித்து வருவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு வங்கி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையிலான போலீசார் வங்கி மேலாளர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெண்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை, நூறு நாள் வேலை தொகை மற்றும் கடன் சிரமமின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்