நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க ஒன்றிய குழு நிர்வாகி அம்சவள்ளி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுமதி, ஒன்றியக்குழு பொறுப்பாளர்கள் சித்ரா, தமிழரசி, சுலோக்சனா, பசுபதி, ராஜேஸ்வரி கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100 நாள் வேலையை முறைப்படி நகர் புறத்துக்கும் அமல் படுத்த வேண்டும். சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும். சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். காலி பணி இடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிரப்ப வேண்டும்.அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் நியாய விலைக்கடைகளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் அம்சவள்ளி நன்றி கூறினார்.