கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு

Update: 2022-10-30 20:19 GMT


மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குருபூஜை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதற்காக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமானோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நேற்று அதிகாலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், தேவர் அமைப்பினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் பால்குடம், முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து தேவர் சிலையில் வைத்து வழிபாடு நடத்தினர்.

தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தளபதி எம்.எல்.ஏ., மேயர் தேன்மொழி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக வந்து மாலை அணிவித்தனர்.

இருசக்கர ஊர்வலம்

மேலும் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, சசிகலா, அ.ம.மு.க. சார்பில் டி.டி.தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி ஜி.கே.மணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, வெங்கடேசன் எம்.பி., துணை மேயர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகர் முழுவதும் போலீசார் ஊர்வலத்தை ஒழுங்குப்படுத்த ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்