நல்ல கணவர் அமைய வேண்டி ஆலமரத்துக்கு மஞ்சள் கயிறு கட்டிய பெண்கள்

நல்ல கணவர் அமைய வேண்டி ஆலமரத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு கட்டினர்.

Update: 2023-05-19 19:29 GMT

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் சாவித்திரி பூஜை செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் காரடையான் நோன்பு என கொண்டாடப்படுகிறது. அதன்படி திருச்சி பொன்மலையில் வசிக்கும் வட மாநில பெண்கள் பொன்மலை ெரயில்வே ஆர்மரி கேட் எதிரே உள்ள கோவில் ஆலமரத்தின் முன்பு மங்களப் பொருட்களை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் ஆலமரத்தை சுற்றிலும் மஞ்சள் கயிறு கட்டி தங்களது கணவன் நீடூழி வாழ வேண்டி வழிபாடு மேற்கொண்டனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் நெற்றியில் குங்கும திலகம் இட்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்