81 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி

மயிலாடுதுறையில்81 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5¾ கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். விழாவில் 81 சுயஉதவி குழுக்கள் மற்றும் இதர கடன்கள் என மொத்தம் ரூ.5.72 கோடி கடன் உதவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், கடனுதவி பெறும் அனைவரும் இந்த தொகையை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி வாழ்வில் மேம்படுவதோடு, அதனை சரிவர திரும்ப செலுத்தி நற்பெயர் பெற வேண்டும் என்றார்.

விழாவில், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்