திருப்பூரில் தனியார் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூரில் தனியார் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-11-01 17:13 GMT

திருப்பூர்

திருப்பூரில் தனியார் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த மாணவி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நீட் தேர்வு பயிற்சி மையம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவருடைய மகள் ஆனந்தி (18). இவர் படியூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து, கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

ரத்தம் கொட்டியது

கண் இமைக்கும் நேரத்தில் ஆனந்தி, 3-வது மாடியில் இருந்து ரோட்டில் விழுந்ததில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்து மணிகண்டன் கதறி துடித்தபடி கீழே ஓடிச்சென்று மகளை தனது மடியில் போட்டு அழுது புரண்டார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.

தற்கொலை முயற்சி

முதல்கட்ட விசாரணையில், மாணவின் தந்தை நேற்று காலை பயிற்சி மையத்துக்கு வந்து, பயிற்சி மைய ஆசிரியரிடம் பேசிவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. பின்னர் மாலையில் தனது மகளை அழைத்துச்செல்ல காத்திருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. காதல் விவகாரம் காரணமா? இல்லை, வேறு ஏதும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பழைய பஸ் நிலையம் அருகே 3-வது மாடியில் இருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்