பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
வேலூரில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் டி.ஐ.ஜி.கலந்து கொண்டார்.
வேலூரில் நடந்த பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் டி.ஐ.ஜி.கலந்து கொண்டார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வேலூர் முத்துமண்டபத்தில் நேற்று நடந்தது. வேலூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் கீதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வேலூர் திட்ட இயக்குனர் நாகராஜன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்து கொண்டு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அவர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து சமூக மேம்பாட்டு நிபுணர் டாக்டர் லெஜிஸ் பெண்கள், குழந்தைகள் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
முகாமில் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மோகன் நன்றி கூறினார்.