காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
ஆலங்குளம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி கிராமத்தில் 1000-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் குடிநீர் கேன்களை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் மாயமான்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.