காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

காவிரி குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-04 18:44 GMT

கீரனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுைற மட்டும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் தங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி கீரனூர்-கிள்ளுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்