பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

ராதாபுரம் அருகே இருக்கன்துறை பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-12 22:06 GMT

வடக்கன்குளம்:

ராதாபுரம் அருகே இருக்கன்துறை பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறை ஊராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்