குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-07 21:22 GMT

உப்பிலியபுரம்:

மறியல்

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரத்தில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களை சாலையின் நடுவே வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு கடந்த 20 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் இல்லை. கோடை காலத்தில் குடங்களை தூக்கிக்கொண்டு வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம்.

இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ெதரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் மேகலா வெள்ளையன், செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது காவிரி குடிநீர் வரத்தில் தட்டுப்பாடு உள்ளதாகவும், இதனால் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பேரூராட்சி அலுவலர்கள், மாற்று ஏற்பாடு மூலம் தண்ணீர் வினியோகத்தை உறுதி செய்வதாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்