மாரியம்மன் கோவிலில் கும்ப பூஜை நடத்திய பெண்கள்
மாரியம்மன் கோவிலில் கும்ப பூஜை நடத்திய பெண்கள்
சின்னாளப்பட்டி திரு.வி.க.நகரில், சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இந்த கோவிலில் விளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு உலக அமைதிக்காக பெண் பக்தர்கள் மூலம் கும்ப பூஜை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெண் பக்தர்கள் கோவிலில் திரண்டு கும்ப பூஜை நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. அதையடுத்து 18 கும்பங்களில் எடுத்து வரப்பட்ட புண்ணிய தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.