வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

அரக்கோணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-27 18:50 GMT

அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜ்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்களுக்கு இதற்கு முன் மாதத்தில் 14 நாட்கள் வேலை கொடுத்து வந்ததாகவும், தற்போது மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே வேலை கொடுப்பதாகவும் கூறி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் அரக்கோணம் ஒன்றிக்குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் நாங்கள் வேலை எதுவும் இல்லாததால் வருமானம் ஏதுமின்றி கஷ்டப்படுகிறோம். இதற்கு முன் கொடுத்தது போன்றே வேலை தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதற்கு ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தரராஜன் வழக்கம்போல் வேலை தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்