மகளிர் புத்தாக்க பயிற்சி

பனவடலிசத்திரம் அருகே மருக்காலங்குளத்தில் மகளிர் புத்தாக்க பயிற்சி நடந்தது.

Update: 2022-07-24 16:41 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே மருக்காலங்குளம் ஊராட்சி மன்றம் மற்றும் சுஸ்லான் பவுண்டேசன் இணைந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினத்தை முன்னிட்டு கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கிராமப்புற மகளிர் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மருதநாச்சியார் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். சுஸ்லான் பவுண்டேஷன் திட்ட மேலாளர் முருகன், வட்டார பகுதி மேலாளர்கள் ராஜா, இளங்கோ ஆகியோர் முன்னிலை வைத்தனர். ராமலட்சுமி வரவேற்றார். இதில் மருக்காலங்குளம், சுண்டங்குறிச்சி, மேலஇலந்தைகுளம் ஆகிய ஊர்களை சேர்ந்த மகளிர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்று பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்